சென்னை: அறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி கலைவாணர் அரங்கத்தில் மாதத்திற்கு ரூ. 2000 வழங்கும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக குழந்தைகளின் கல்வி மற்றும் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களை அடையாளம் கண்டு அக்குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக “தாயுமானவர் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பெற்றோர்களை இழந்தவர்கள் மற்றும் பெற்றோரின் ஒருவரை இழந்தவர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி மற்றொரு பெற்றோரால் பராமரிக்க முடியாத குழந்தைகளை அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் அவர்களை பாதுகாத்திடவும் “அன்பு கரங்கள் திட்டம்” அறிமுகப்படுத்தப்படுகிறது.
குழந்தைகளின் 18 வயது வரை பள்ளி படிப்பை இடைநீற்றல் இன்றி கல்வியை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மாதம் ரூ. 2000 உதவித்தொகை வழங்க இருக்கிறது. பின் பள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை வழங்கவும் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்த உள்ளது. அன்பு கரங்கள் என்ற இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்துகிறார்.
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறார். பெற்றோர்களை இழந்தவர்கள் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி நிறுவனங்களின் தமிழ்நாடு அரசால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


