சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா.
விஜய்: தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பேரறிஞர் பெருந்தகை அண்ணா மாநில உரிமைக்காக குரல் கொடுத்தவர். இருமொழிக் கொள்கையை தமிழகத்திற்கு பெற்று தந்தவர். சமூக நீதியை கொள்கையாக பின்பற்றியவர். சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்க முற்பட்டவர். தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றம் செய்தவர். “இரட்டை வேடம் போட்டு தமிழர்களை ஏமாற்றாமல் அவர்களது நலனுக்காக உழைத்தவர்” பேரறிஞர் அண்ணா என புகழாரம் சூட்டியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில், திமுக நிறுவனர் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆன பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மாபெரும் சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்ற வகையில் அவருக்கு வணக்கங்களையும் மரியாதைகளையும் செலுத்துகிறேன். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவரது கொள்கைகள் மற்றும் துணிவையும் மக்கள் நலனையும் போற்றி வணங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: “தமிழ்நாடு தமிழ் திராவிடம் என்றால் அறிஞர் அண்ணா தான். அண்ணா என்றால் தமிழ்நாடு தமிழ் திராவிடம்”. இந்தியாவில் ஒரு மாநில கட்சி அமைக்க முடியுமா? என்றும், நாட்டுக்குள் ஒரு தமிழ் நாடா? என்ற சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில் தனது சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டு தென்றல் அறிஞர் அண்ணா என்று புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணா பிறந்தநாள் அண்ணா இன்று குடும்ப பிடியில் உள்ள தமிழ்நாட்டின் மீட்டு மக்களுக்கான “அண்ணாயிசம்” போற்றும் ஆட்சியை அஇஅதிமுக தலைமையில் நிறுவ வேண்டும் என உறுதிமொழி ஏற்போம். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம், அண்ணா நாமம் வாழ்க என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


