சென்னை: சென்னையில் இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு முழு தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. வெளியிட்ட செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மற்றும் வளர்ப்பு நாய்களை முறையாக கையாளுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த மற்றும் வளர்ப்பு நாய்களை முறையாக கையாளுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு கையாண்டு வருகிறது. என் நிலையில் முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கையில் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பிராணிகள் வதை தடுப்புச் சட்டம், புகார் தொடர்பான உதவி எண்கள், தெரு நாய்களை பிடித்து QR CODE மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் நடவடிக்கைகள், தெரு நாய்களுக்கு செலுத்தப்பட்ட QR குறியீடு மற்றும் மைக்ரோ சிப் செலுத்தும் பணிகள் கீழ்காணும் முறையில் நடைபெறுகிறது . நிகழ்விடம் செய்முறை, கருத்தடை அறுவை சிகிச்சையின் போது மைக்ரோ சிப் பொருத்தப்படுதல், கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள்.
கருத்தடை அறுவை சிகிச்சை விபரங்களை பின்வருமாறு,
வெறிநாய்க்கடி நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட விவரம் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விவரம், தெரு நாய்கள் கணக்கெடுப்பு விவரம், ஆகியவற்றை படி கடந்த ஆண்டு டபுள்யூ வி எஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
15 மண்டலங்களில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 157 தெரு நாய்கள் உள்ளது. தெரு நாய்கள் பெருக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை, கால்நடை மருத்துவங்கள் மற்றும் பணியாளர்கள் விவரம், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் நிதிநிலை அறிவிப்பின்படி வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், செல்லப்பிராணி உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகள், செல்லப்பிராணிகளுக்கான உரிமங்கள் மற்றும் மைக்ரோ சிப் பொருத்துதல், செல்லப்பிராணிகள் மற்றும் நாய்களின் தரவுகளை சேமித்து கண்காணிப்பு தொடர்பாக நடவடிக்கைகள்.
உச்ச நீதிமன்ற இடைக்காலத்தில் இருந்து நாள் 22/8/2025 அன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு குழு முன் விசாரணைக்கு வந்த போது இடைக்கால தீர்ப்பின்படி, வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட நாய்கள் மற்றும் வெறிநாய்க்கடி நோய் இருக்கும் நாய்கள் மற்றும் ஆக்ரோஷமான தெரு நாய்கள் ஆகியவற்றை பிடிக்க உரிய நடவடிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மூன்று விதமான நாய்களை தவிர பிற நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பு செய்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டிருந்தது.


