அதிமுகவுடன் நேரடியாக மோதாத விஜய்?? கூட்டணிக்கு அடிபோடும் தவெக!!

Vijay not clashing directly with AIADMK?? Thaveka will give a blow to the alliance!!

அரசியல்: தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் வீகென்ட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அவர் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மற்றும் பாஜகவை மட்டுமே நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி பேசிக்கொண்டு வருகிறார். மேலும் இதர கட்சிகளின் தலைவர்களையும் அவர்கள் கொள்கையை பற்றியும் நடிகர் விஜய் விமர்சிப்பதை தவிர்த்து உள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நேரடியாக விவாதத்திற்கு அழைக்கவே அவரைப் பற்றி விமர்சித்து வருகிறார். மேலும் தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே போற்று என்றும் தன்னை மிகப் படுத்தி கூறிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சிப்பதும் இல்லை கருத்து வேறுபாடும் இருந்ததாக தெரியவில்லை.

தவெக தலைவர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்க இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி விமர்சிப்பதை தவிர்த்து உள்ளார். மேலும் சனிக்கிழமை நாகப்பட்டினம் திருவாரூர் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்போது எடப்பாடி பழனிச்சாமி விஜய் அவர்களுக்கு நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பதை செய்து வட்டாரங்களில் பரவிவருகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இன்னும் தேர்தலுக்கு சில மாதங்களை இருக்கும் நிலையில் தவெக   மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருமா இல்லை தன்னுடன் மற்ற கட்சிகளை  கூட்டணி சேர்க்குமா என்பதை சில மாதங்களில் தெரியவரும். மேலும் தமிழக வெற்றி கழகம் தனித்தே போட்டியிடும் என்று செய்தி வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram