கரூர் துயர சம்பவம் விஜய் மேல தப்பே இல்லை!! திட்டமிட்ட சதிதான் காரணம் மக்கள் ஆதரவு வெடிப்பு!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால், இதற்கான காரணம் தலைவர் விஜய் இல்லை, பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என மக்கள் திறமையாக கூறி வருகின்றனர்.

நேற்று மதியம் நாமக்கல்லில் பேசி முடித்த விஜய், இரவு 7 மணியளவில் கரூர் வந்தார். தவெக சார்பில் அனுமதி கேட்ட இடம் “லைட் ஹவுஸ் ரவுண்டானா” எனினும், காவல்துறை அனுமதி அளித்தது குறுகலான “வேலுச்சாமிபுரம்” பகுதியை. அந்த பகுதி சாலைகள் மிகவும் குறுகலாக இருந்ததாக கரூர் மக்கள் தெரிவிக்கின்றனர். விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் சிலர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்யப்பட்டது. அதே சமயத்தில் கூட்டம் திடீரென நெரிசலாக மாறி பலர் சிக்கினர். திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பகுதி இருளில் மூழ்கியது. அதே நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் உள்ளே வந்ததால் மக்கள் நகர்ந்தார்கள். இதன் விளைவாக பலர் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. சிலர் நீர்ச்சத்து குறைவால் மயக்கம் அடைந்தனர். போலீசார் தடியடி நடத்தியதாகவும், இதுவும் கூட்ட நெரிசலுக்குக் காரணமாக அமைந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர். சம்பவ இடத்திலேயே 29 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். பின்னர் மருத்துவமனையில் 40 பேர்வரை மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பவத்துக்குப் பிறகு விஜயை குற்றம் சொல்வோருக்கும், அவரை ஆதரிப்போருக்கும் இடையில் கடும் விவாதம் எழுந்துள்ளது.

“விஜயை கெடுப்பதற்காகவே திட்டமிட்ட குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. போலீசார் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை. இது விஜயின் தவறு அல்ல” என கரூர் மக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் கூறுகின்றனர். விஜய் அரசியலுக்கு வந்தது மக்கள் நலனுக்காகத்தான். அவர் பெயரை கெடுக்க சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள். பாதுகாப்பு சரியில்லாத இடத்தில் அனுமதி கொடுத்ததே பெரிய தவறு” என மக்கள் உறுதியாக நின்று தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு வலுவான ஆதரவாக எழுந்துள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram