தவெக தலைவர்கள் மீது வலைவீசும் காவல்துறை!! இன்று இரவுக்குள் கைது நடவடிக்கை??

கரூர் துயர சம்பவம் தொடர்ந்து அரசியல் மற்றும் சட்ட ரீதியான அதிர்வுகளை உருவாக்கி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த நிகழ்வுக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் தவெக தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல்குமார், மற்றும் மதியழகன் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில் கூட்ட நெரிசல் ஏற்படும் அளவுக்கு அனுமதிக்கப்படாத கூட்டம் நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடுமையான தவறுகள் நிகழ்ந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். இதனையடுத்து, இவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் உருவாக்கப்பட்டு தற்போது மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை பிடிக்க கரூர், திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிரமாக வலைவீசி வருகின்றனர். அதேவேளை, புஸ்ஸி ஆனந்தை இன்று இரவுக்குள் கைது செய்யும் நோக்கில், 5 சிறப்பு குழுக்கள் மதுரை மற்றும் புதுச்சேரி நோக்கி விரைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசார் இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தவெக ஆதரவாளர்கள் தங்கள் தலைவர்களுக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கைகள் அரசியல் நோக்குடன் செய்யப்பட்டவை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். மற்றொரு பக்கம், சிலர் நேரம் குற்றவாளிகளை வெளிச்சம் போட்டு காட்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தவெக தலைவர்களின் கைது இன்று இரவுக்குள் நடக்குமா அல்லது நீதிமன்றம் வரை தாமதமா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram