திருவனந்தபுரம், கேரளாவில் இரண்டு மாதங்களாக நடந்த ஓணம் பம்பர் லாட்டரியின் குலுக்கல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் ரூ.25 கோடி பரிசு, பெண் ஒருவருக்கு வந்ததாக கூறப்பட்டாலும், தற்போது அந்த பரிசு ஆலப்புழாவை சேர்ந்த பெயிண்ட் கடைக்காரர் சரத் எஸ் நாயருக்கு தான் கிடைத்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதாரண பெயிண்ட் கடை நடத்தி வந்த சரத் நாயர், கொச்சி நெத்தூரில் உள்ள லாட்டரி ஏஜென்சியில் இந்த டிக்கெட்டை வாங்கியிருந்தார். தற்போது அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி பரிசு அடித்தத்தால் அவர் மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளார். கேரளாவில் தினமும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. “ஒருநாள் நாமும் பணத்தை வென்று அதிர்ஷ்டசாலியாக மாறிவிடுவோம்” என்ற எண்ணத்தில் பலரும் டிக்கெட்டுகளை வாங்கி வந்தனர்.
இந்த முறை ரூ.500 ஓணம் பம்பர் லாட்டரியின் விலையாக இருந்தது. ஆனாலும் இந்த முறை 80 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் பரிசு எண் TH 577825 ஆகும். அந்த டிக்கெட்டை சரத் எஸ் நாயர் வாங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சரத் நாயர் வாங்கிய டிக்கெட், பாலக்காடில் உள்ள பகவதி லாட்டரி ஏஜென்சியிலிருந்து கொச்சி வைட்டிலா வழியாக நெத்தூரில் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் பரிசு ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கும், மூன்றாம் பரிசு ரூ.50 லட்சம் வீதம் 20 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. விற்ற டிக்கெட்களில் பாலக்காடு 14.07 லட்சம் டிக்கெட்டுகளுடன் முதல் இடத்தில், திரிசூர் 9.37 லட்சத்துடன் இரண்டாம் இடத்தில், திருவனந்தபுரம் 8.75 லட்சத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை சட்டவிரோதமாகும்.
கேரள லாட்டரி டிக்கெட்டுகளை தமிழகத்தில் விற்றாலோ வாங்கினாலோ சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக வாங்கிய டிக்கெட்டுக்கு பரிசு கிடைத்தாலும், கேரள அரசு அந்த தொகையை வழங்க மறுக்கும் உரிமை பெற்றுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் ஏழை மக்களின் நலனுக்காக லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.





