கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும், நடிகர் சிலம்பரசன் (சிம்பு) மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணையும் புதிய படத்திற்கு “அரசன்” எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்தவுடன் தாணு தனது சமூக வலைதளப் பக்கத்தில் “ஆளப்பிறந்த அரசன் வெற்றியுடன் சிலம்பரசன்” எனக் குறிப்பிட்டு, படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் கையில் கத்தி ஏந்தியபடி வீரத்துடன் நிற்கும் தனுஷின் புகைப்படமும், “அரசன்” என்ற பெயரும் உள்ளபடி வடிவமைக்கப்பட்டுயுள்ளது. வெற்றிமாறன் மற்றும் சிம்பு இணையும் இந்தப் புதிய கூட்டணி பற்றி ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் உருவாகியுள்ளது. திரைப்பட வட்டார தகவல்படி, “அரசன்” படம் “வடசென்னை” கதையின் தொடர்புடைய கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே இதற்கான ப்ரோமோ ஷூட்டிங் நடந்தது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என தகவல்கள் வெளியானது. தற்போது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ப்ரோமோ வீடியோவும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “அசுரன்” படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதே தயாரிப்பாளர் மற்றும் அதே இயக்குநர் இணைந்து தற்போது சிம்புவை நாயகனாகக் கொண்டு “அரசன்” படத்தை உருவாக்குவதால், இது சிம்புவின் திரைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். மேலும், “அசுரன்” படத்திற்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் மீண்டும் இந்தப் படத்திற்கும் இணைவாரா?? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சிம்பு படத்தின் அறிவிப்பு வெளியாகியதிலிருந்து தமிழ் திரையுலகம் உற்சாகத்தில் மூழ்கியுள்ளது.





