ரஷ்ய அதிபருடன் டிரம்ப் பேச்சு வார்த்தை!! உக்ரைன் அதிபர் ஜெலன்சியுடன் இன்று சந்திப்பு!! 

Trump talks with Russian President
வாஷிங்டன்: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் ஆனது சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வந்த நிலையில் மோதலை நிறுத்த கொண்டுவரப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும்  தோல்வியில் முடிந்தது. இதனால் உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில் உக்கிரன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதிபர் டிரம்பை இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இதில் உக்ரைன் பாதுகாப்பு, ரஷ்யா மீதான தடைகள் அதிகரிப்பு மற்றும் ஆற்றல் தேவைகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரின் சந்திப்பு இன்று நடத்தப்பட உள்ள நிலையில் நேற்று ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். இது பற்றிய கருத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “நான் இப்போது ரஷ்ய அதிபர் புதினுடன் உரையாடினேன். இந்த உரையாடல் நீண்ட நேரமாக நடைபெற்றது. உரையாடலில் உள்ளடக்கங்களை விரைவில் நான் வெளியிடுவேன்.
ரஷ்ய அதிபரான புதினும் இது குறித்து விரைவில் வெளியிடுவார்”, என சமூக வலைத பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ள நிலையில் புதினுடன் நடத்தும் பேச்சு வார்த்தை மற்றும் அதன் பின்னணி குறித்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram