90களில் க்யூட்டான நடிகையான ரம்பா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தவர். அவரது திருமணத்திற்குப் பிறகு, அவர் நடிப்பின் மேல் நாட்டம் காட்டவில்லை. முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாக மாறியிருந்தார். அவ்வப்போது சில ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராக வந்து செல்வார். கடைசியாக விஜய் டிவியின் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக பொறுப்பேற்று இருந்தார். இப்பொழுது நடைபெறும் அந்நிகழ்ச்சியின் சீசனில் இவர் நடுவராக உள்ளார்.
சின்னத்திரையில் என்னதான் அவர் அப்பப்போ வந்து சென்றாலும், அவரது ரசிகர்கள் பெரும்பாலும் அவரை வெள்ளித்திரையில் காணவே விருப்பத்தை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவர் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில், தான் நடிக்கப் போவதாகவும், நடிப்பதற்காக தனக்கான நல்ல கதையைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், அவர் எனக்கு திரைப்படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். ஏனென்றால், அவைகள் தான் எனக்கு வாழ்வளித்தது என்று மனதார கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து மக்கள் தொடர்பாளர் ரியாஷும், கூடிய விரைவில் ரம்பா ரீஎன்ட்ரி கொடுக்கப் போகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது ரசிகர்களின் இந்நேரம் அவர், படத்தை செலக்ட் செய்து இருப்பார் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர் முழுக்க முழுக்க படம் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இது ரீஎன்ட்ரி என்பதால் தனித்துவமான கேரக்டராக இருக்க வேண்டும் என்றும், அந்தக் கதை அவருக்கும், மக்களுக்கும் உள்ள கனெக்டிவிட்டியை அதிகரிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றும் உறுதியோடு கதையை செலைக்ட் செய்து வருகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.