நம் தினம்தோறும் பயன்படுத்தும் அரிசிகளும் அரிசியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்களும்:
நாம் தினந்தோறும் உணவின் முக்கியமாக எடுத்துக் கொள்ளக்கூடிய பொருட்களில் ஒன்று அரிசி இதோட பயன்கள் உங்களுக்கு தெரியுமா? நாம் அரிசியோடு சுவையை தானே பார்த்திருப்போம் ஆனால் அதோடு மருத்துவ குணங்களை இன்றளவிலும் பலரும் தெரிந்து கொள்வதில்லை. அரிசியின் பயன்கள்:
கருப்பு கவுனி அரிசி :
இதை அனைவரும் பார்த்திருப்போம், சமைத்திருப்போம், ஆனால் பயன்கள் தெரியாது .
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்படும் அவ்வாறு காணப்படும்போது உடலில் இன்சுலினை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கி நம்மை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
மாப்பிள்ளை சம்பா அரிசி: இன்று மக்கள் பெருமளவில் அரிசியின் வகைகள் தெரியாமல் பயன்கள் தெரியாமல் இருப்பார்கள்
இது ஒரு பழமையான ஒரு அரிசி. இன்றளவில் அதிகமாக மக்களுக்கு தோன்றும் அல்சர் மற்றும் நீரிழிவு நோயால் மக்கள் அதிக அளவில் பாதிப்படைந்து இருக்கிறார்கள். மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிடுவதால் உடலில் ரத்தம் அதிகரிக்கும். உடலில் அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடலில் சூடு அதிகரிப்பது. மாப்பிள்ளை சம்பா அரிசி உண்பதால் நமக்கு உடலில் குளிர்ச்சி கிடைக்கும் அவ்வளவு அரியவகை மருத்துவ குணமுடையது இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி
காட்டுயாணம் அரிசி :காட்டுயாணம் அரிசி அதாவது நம் படித்திருப்போம் பார்த்திருப்போம் அதன் பயன்கள் தெரிந்திருக்காது. அதிக பயன்பெறக்கூடிய மருத்துவ குணமுடைய ஒரு அரிசி காட்டுயாணம். காட்டு யாணம் அரிசியில் நமக்கு வைட்டமின் பி மற்றும் இரும்பு சத்து மிகவும் அதிகமாக உள்ளது இந்த வகை அரிசி நிறைய தாதுக்கள் நிறைந்து இருக்கக்கூடிய ஒருவகை அரிசியாகும்.
குறிப்பு :இது நீரிழிவு நோயை உடலில் கட்டுப்படுத்தும்.பூங்கர் அரிசி : பூங்கர் அரிசி என்றால் பெண்களின் அரிசி என்று கூட சொல்லலாம்.இந்த அரிசி சிவப்பு நிறத்தில் காணப்படும் அதாவது மற்ற அரிசியை காட்டிலும் இந்த பூங்கர் அரிசி அதிக பயன்கள் தரக்கூடிய அரிசியாகும்.
அதாவது பெண்களுக்கு மிகவும் முக்கியமாக அதிக பயன்கள் தரக்கூடிய அரியவகை அரிசியாகும். நாம் தினந்தோறும் நமக்கே தெரியாமல் உண்ணும் உணவில் இருந்து பல மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளது. இதனை அறிந்து நாம் அதனை பயன்படுத்த வேண்டும்


