வெயில் வாட்டி வதைக்குதா?அப்போ இதை குடிங்க!!!

கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் நமக்கு உடலில் சூடு அதிகரிக்கும்.இதனை சரி செய்யும் விதத்தில் நம் கம்மங்கூழ் எடுத்துக் கொள்ளலாம்.கம்மங்கூழ் பாரம்பரிய முறையில் முன்னோர் காலத்தில் இருந்து நாம் தினந்தோறும் குடிக்கும் கூழ் வகைகளில் ஒன்று. அடுத்து வரக்கூடிய வெயில் காலங்களில் நாம் டீ, காபி போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து அதற்கு பதிலாக கம்மங்கூழ் குடிப்பது மிகவும் உடலுக்கு நல்ல பயனை தரும்.

குறிப்பு:

* உடலில் உஷ்ணம் குறைக்கவும் *செரிமான பிரச்சனையை நீக்கவும் பயன்படுகிறது.

மருத்துவ குணங்கள் :

குடல் புற்றுநோயை தடுக்க மிகவும் முக்கிய காரணியாக பயன்படுகிறது.

வெயில் காலத்தில் ஏற்படும் வெப்பத்தால் உடலின் சூடு அதிகரிக்க கூடும் இதனால் உடலில் உஷ்ணம் ஏற்படும் இதனை சரி செய்ய கம்மங்கூழ் குடிப்பது மிகவும் நல்லது. இது மட்டும் இல்லாமல்

பலரும் உடல் எடையை அதிகரித்து அதனை குறைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்து உள்ளீர்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் மிகவும் கடினமான பல வழிமுறைகளை பின்பற்றி வந்திருப்பீர்கள். உடல் எடையை குறைக்க எளிமையான ஒரு வழி சிறுதானிய வகையான கம்பை பயன்படுத்தி தினந்தோறும் கம்பை எடுத்துக் கொள்ளலாம்.

கம்புல அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.நடைமுறை வாழ்வில் வரும் வெயில் காலங்களில் துரித உணவை தவிர்த்து இந்த மாதிரியான இயற்கையான சிறு தானிய வகைகளை எடுத்து கூலாகவும் அல்லது ரொட்டியாகவும் சாப்பிட்டு பயன்படுத்தலாம்.

பின்குறிப்பு அளவுக்கு :

“மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு “

சத்து நிறைந்த கம்பை அதிக அளவு சாப்பிடாமல் அளவோடு சாப்பிட்டு வரும் வெயில் காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைத்து ஆரோக்கியமாக இருக்க இதை போன்ற இயற்கையான உணவை பயன்படுத்த வேண்டும்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram