பொதுவாக ஒவ்வொரு மாணவர்களும் தனித்தன்மை இருக்கும். மாணவர்கள் பொதுவாக ஒரு சில பாடங்களில் நல்ல படிப்பார்கள் ஒரு சில பாடகங்களில் நல்லா படிக்க மாட்டார்கள். மாணவர்களை பெற்றோர் முதலில் ஊக்கப்படுத்த வேண்டும். “அவனைப் பார் நன்றாக படிக்கிறான் “நீ அவனைவிட அதிகமாக மதிப்பின் எடுக்க வேண்டும் என்று சக மாணவர்களுடன் ஒப்பிட்டு அவனை குறைவாக பேசக்கூடாது.
இதனால் அவன் மனநிலை பாதிக்கப்படும் இதனால் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. அதைப்போல தேர்விற்கு பயிற்சி பெறும் நேரத்தில் அவனை தொலைக்காட்சி பார்க்காதே என்று சொல்லிவிட்டு அவன் முன்பு பெற்றோர்கள் தொலைக்காட்சி செல்போன்பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
தேர்வு நேரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் :
எளிதில் மனநிலைமையை உடல் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய
1.மோர் வகைகள் எடுத்துக் கொள்ளலாம்
2.பழச்சாறு வகைகள் எடுத்துக் கொள்ளலாம்
3. எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
தேர்வு நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.
2.மைதாவால் ஆன உணவை தவிர்ப்பது நல்லது.
3.கொழுப்பு நிறைந்த உணவை தவிர்ப்பது நல்லது அதை போன்று கடைகளில் சிப்ஸ் மற்றும் எண்ணெய் பொருட்களை தவிர்ப்பது நல்லது இதனால் அவனுக்கு செரிமான கோளாறு ஏற்படலாம்
ஒரு மாணவனால் அதிக நேரம் படித்துக் கொண்டே இருக்க முடியாது அவனை சிறிது நேரம் விளையாட விட வேண்டும் பின்பு வந்து படிக்க வேண்டும் அப்பொழுதுதான் அவனது மனநிலை சீராக இருக்கும்.
தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும்பாலும் பதற்றத்துடன் காணப்படுவார்கள்.அவனுக்கு அப்போது இருக்கும் முதல் எதிரி அல்லது முதல் பிரச்சனை பதற்றம் என்று கூட சொல்லலாம். பதற்றத்தால் மட்டுமே பல மாணவர்கள் மதிப்பெண் நிலையை இழக்கிறார்கள்.
பதற்றம் ஏற்படுவதால் திடீரென்று எதுவும் படித்தது நினைவில் வராது அதனால் மாணவர்களுக்கு பெற்றோர்கள் அதிக அளவு “தன்னம்பிக்கை” தர வேண்டும்.
“நான் ரசித்து படித்து தேர்வை எழுத வேண்டும்” நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தும் விதத்தில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கலாம். இதனால் மாணவர்கள் மனநிலை உடல்நிலை இரண்டிலும் சரியாக வைத்து படித்து அதிக மதிப்பெண் எடுக்க அவர்களுக்கு ஏதுவாக அமையும்.





