Cricket : இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் நேற்று விளையாடியது. இதில் ரோகித் சர்மா மாபெரும் சாதனை ஒன்றை செய்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான அரையிறுதிபோட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுமா அல்லது இந்திய அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த போட்டி நடைபெற்றது.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று ஆசிரியர் அணி முதலில் பேட்டிங் களம் இறங்கியது. முதலில் களம் இறங்கிய தொடக்க வீரரான ஹெட் இந்திய அணியின் தலைவலியாக பார்க்கப்பட்டது அவர் தொடக்கத்தில் விறுவிறுப்பாக தொடங்கினாலும் ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர் என பரபரப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அவரது விக்கெட்டை தட்டி தூக்கினார்.
அதிகபட்சமாக ஸ்மித் 73 ரன்களும் அலெக்ஸ் கேரி 61 ரன்களும் எடுத்திருந்தனர். 49.3 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் எழுந்து ஆசிரியானி 265 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. முழு தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவரில் இலக்கிய எட்டி வெற்றி பெற்றது. இதில் ரோகித் சர்மா 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்த போட்டியில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் அடிச்சது மூலமாக ஐசிசி ஒருநாள் போட்டி தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் கிறிஸ் கெயில் 64 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். தற்போது ரோகித் சர்மா அந்த சாதனை முறியடித்து 65 சித்தர்கள் அடித்துள்ளார். தற்போது முதலிடத்தில் ரோகித் சர்மாவும் ,இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயிலும் மூன்றாவது இடத்தில் மேக்ஸ்வெல் 49 சிக்ஸர்கள் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.





