போதும் ஹெட் கெளம்புங்க!! இந்தியாவின் தலைவலியை போக்கிய வருண்!!

Varun, who solved India's headache

Cricket : இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியா அணியுடன் அரையிறுதி போட்டியில் விளையாடியது. இதில் வருண் செய்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான அரையிறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது. தாஸ் என்று பேட்டிங்கில் தேர்வு செய்து களமிறங்கியது. 49 புள்ளி மூணு ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் ஆஸ்திரேலியா அணி தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் இந்திய அணியின் தலைவலி என கூறப்படுகிறது. காரணம் இவர் இந்திய அணியுடனான இறுதிப்போட்டி மற்றும் அரையிறுதி போட்டி போன்ற போட்டிகளில் சமீப காலமாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். சொல்லப்போனால் இந்திய அணி தோற்பதற்கு காரணமே டிராவிஸ் ஹெட் ஆடும் சிறப்பான ஆட்டம் தான். அதனால் தான் அவர் இந்திய அணியின் தலைவலி என கூறப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆரம்பத்தில் பவுண்டரிகள் சிக்ஸர்கள் என பறக்கவிட்டார் டிராவிஸ் ஹெட். இதன் மூலம் இந்திய அணி ரசிகர்கள் பலரும் வருண் சக்கரவர்த்தியை பந்து வீச சொல்லுங்கள் என வலைதளங்களிலும் மைதானத்திலும் குரல்கள் எழுப்பினர். எட்டாவது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீச வந்தார். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல், இரண்டாவது பந்தை அடிக்க முயன்று கில் கேட்ச் பிடிக்க விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

 இதனால் பலரும் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியின் தலைவலியை போக்கிய வரும் என்று வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்திய அணி அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி உள்ளது. இன்று மோதும் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணி இடையிலான போட்டிக்கு பின் இரு அணிகள் எந்த அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது என்பது தெரியவரும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram