பழைய ராகுல் நினைச்சுட்டீங்களா!! ஆஸ்திரேலியா அணியை துவம்சம் செய்த கே எல் ராகுல்!!

KL Rahul destroys Australia

Cricket: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை பொளந்து கட்டிய கே எல் ராகுல்.

இந்திய அணி நேற்று ஆஸ்திரேலிய அணியுடன் அரையிறுதி போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியானது இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி இடையில் ஆன இறுதி போட்டியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் டாஸ் வென்றது. ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 264 ரன்கள் அடித்தது.

தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் விராட் கோலி மைதானத்தில் இருந்தபோது கே எல் ராகுல் களமிறங்கினார். இதற்கு முன் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் ஆமையை விட மெதுவாக விளையாடி 107 பந்துகளுக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது பெரும் சர்ச்சை அப்போது கிளப்பியது. மேலும் அந்தப் போட்டியில் தோல்விக்கு காரணம் கே எல் ராகுலின் மெதுவான ஆட்டம் தான் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கே எல் ராகுல் களத்திற்கு வந்தபோது ரசிகர்கள் மத்தியில் அதே ஆமை வேகத்தில் எங்கு கேஎல் ராகுல் ஆட போகிறாரோ என்ற வருத்தத்தில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த நிலையில். கே எல் ராகுல் கடைசி நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டு பவுண்டரிகள் மட்டும் இரண்டு சிக்ஸர்கள் என ஆஸ்திரேலிய அணி பவுலர்களை பறக்க விட்டார். அதேபோல் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவை என்ற இருந்த நிலையில் 49 வது ஓவரில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் கே எல் ராகுல் அது மட்டுமல்லாமல் இந்த போட்டியில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 123 ஆக இருந்தது. இதன் மூலம் கே எல் ராகுலின் ரசிகர்கள் பழைய கே.என் ராகுல் என்று நினைத்து விட்டீர்களா என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram