தளபதி விஜய் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் எச்.வினோத், இந்தப் படம் விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு முடிவுரையாகப் பார்க்கப்படுவதைத் திட்டவட்டமாக மறுத்துப் பேசினார்.
ஆடிப் பாடவும் செய்யலாம்.. உட்கார்ந்து யோசிக்கவும் செய்யலாம்: படம் குறித்துப் பேசிய வினோத், “ஜனநாயகன் படம் முழுக்க முழுக்க விஜய் படம். இதில் ரசிகர்கள் தியேட்டரில் ஆடிப் பாடி கொண்டாடவும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதே நேரத்தில், அமைதியாக உட்கார்ந்து யோசிக்க வைக்கவும் படத்தில் பல தருணங்கள் உள்ளன. இந்தப் படம் ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னர் மட்டுமல்ல, சமூகத்திற்கான ஒரு செய்தியும் கூட” எனத் தெரிவித்தார்.
இதுதான் பிகினிங்: விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய வினோத், “பலரும் இது தளபதிக்கு ‘End’ (முடிவு) என நினைக்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன்.. தளபதிக்கு இது ‘End’ கிடையாது. இதுதான் அவரோட ‘Beginning’ (ஆரம்பம்). ஒரு நடிகனாக இருந்தவர் இப்போது ஒரு தலைவனாகப் பரிணாமம் பெறுகிறார். அந்தப் பயணத்தின் முதல் புள்ளிதான் இந்த ஜனநாயகன்” என்று ஆவேசமாகப் பேசினார்.
வினோத்தின் நம்பிக்கை: இயக்குனர் எச்.வினோத்தின் இந்தப் பேச்சு, விஜய் அரசியலுக்குச் சென்றாலும் மக்கள் மத்தியில் இன்னும் பெரிய ஆளுமையாக வளர்வார் என்பதையே காட்டுகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் விஜய்யின் அரசியல் கொள்கைகளைச் சொல்லும் ஒரு ‘மினி’ தேர்தல் அறிக்கையாகவே இருக்கும் எனத் திரையுலகினர் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதுதான் பிகினிங்” என்று வினோத் சொன்னபோது மைதானமே கைதட்டல்களால் அதிர்ந்தது. விஜய்யின் திரைப் பயணம் அரசியலில் ஒரு புதிய தொடக்கத்தைக் கண்டுள்ளது என்பதை இந்த விழா உறுதி செய்துள்ளது


