மருமகள் அவுட்.. மகள் இன்!! பசுமைத் தாயகம் அமைப்பைக் கைப்பற்றிய ஸ்ரீகாந்தி!! அன்புமணியை அதிர வைத்த ராமதாஸ்!!

Srikanthi appointed as Pasumai Thaayagam President 2025

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவி வரும் அரசியல் மோதல் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாமகவின் சுற்றுச்சூழல் பிரிவான ‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மகள் ஸ்ரீகாந்திக்கு புதிய பொறுப்பு: சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பசுமைத் தாயகம் அமைப்பின் புதிய தலைவராக மருத்துவர் ராமதாஸின் மூத்த மகளும், பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி (என்கிற ஸ்ரீகாந்திமதி) நியமிக்கப்பட்டுள்ளார்.

சௌமியா அன்புமணி நீக்கம் ஏன்? கடந்த சில மாதங்களாக அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து ஓரங்கட்டி வரும் ராமதாஸ், அதன் ஒரு பகுதியாக சௌமியா அன்புமணியிடமிருந்த இந்தப் பொறுப்பைப் பறித்துள்ளார். ஐநா சபையின் ஆலோசனையைப் பெற்றுள்ள இந்த சர்வதேச அளவிலான அமைப்பின் தலைவராக நீண்ட காலம் சௌமியா அன்புமணி பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகாந்தியின் ஆவேசப் பேச்சு: பதவியேற்ற பின் பேசிய ஸ்ரீகாந்தி, தனது சகோதரர் அன்புமணியை மிகக் கடுமையாக விமர்சித்தார். “மருத்துவர் ஐயா இல்லை என்றால் அன்புமணி ஒன்றுமில்லை. 40 ஆண்டு உழைப்பில் உருவான கட்சிக்கு ஐயாவைத் தவிர வேறு யாரும் உரிமை கோர முடியாது. உங்களுக்குத் தலைவர் பதவி வேண்டும் என்றால் தனிக்கட்சி தொடங்கிச் செல்லுங்கள்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

 மருமகள் (சௌமியா) வசம் இருந்த பொறுப்பு தற்போது மகளிடம் (ஸ்ரீகாந்தி) சென்றுள்ளது. 2026 தேர்தலுக்கு முன் பாமக-வில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram