இன்னைக்கு ஷாப்பிங் போறீங்களா?? புத்தாண்டு ஸ்பெஷல்.. 50% தள்ளுபடி வழங்கும் முன்னணி பிராண்டுகள்!!

NewYearOffers

புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் ஷாப்பிங் திருவிழாதான் களைகட்டும். 2025-க்கு விடை கொடுத்து 2026-ஐ வரவேற்கும் இந்த வேளையில், சென்னை தி.நகர் முதல் கோயம்புத்தூர் கிராஸ் கட் ரோடு வரை அனைத்து வணிக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவர போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை அறிவித்துள்ளன.

நகைக்கடைகளில் அதிரடி: புத்தாண்டு அன்று தங்கம் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு. இதைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஜிஆர்டி (GRT), லலிதா ஜூவல்லரி மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற நிறுவனங்கள் “செய்கூலி மற்றும் சேதாரம் கிடையாது” (Zero Wastage) போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. சில கடைகளில் ஒரு சவரன் தங்கம் வாங்கினால் வெள்ளி நாணயம் இலவசம் என்ற சலுகையும் உண்டு.

துணிக்கடைகளில் தள்ளுபடி: புத்தாண்டு ஸ்பெஷலாக போத்தீஸ், சென்னை சில்க்ஸ் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் 30% முதல் 50% வரை தள்ளுபடி அறிவித்துள்ளனர். குறிப்பாக ‘பை ஒன் கெட் ஒன்’ (Buy 1 Get 1) ஆஃபர்கள் இளைஞர்களைக் கவர்ந்து வருகின்றன. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவையும் ‘நியூ இயர் சேல்’ மூலம் ஆடைகளுக்குப் பெரும் தள்ளுபடி வழங்கி வருகின்றன.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்: வசந்த் அண்ட் கோ, சத்யா போன்ற கடைகளில் ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின் மற்றும் ஏசிகளுக்குப் பழைய பொருட்களைக் கொடுத்துப் புதிய பொருட்களை மாற்றிக்கொள்ளும் (Exchange Offer) வசதியோடு, கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்களும் வழங்கப்படுகின்றன. மொபைல் போன்களுக்கு பூஜ்ஜிய வட்டி விகிதத்தில்  போன்களை வாங்கும் வசதி இந்த புத்தாண்டில் பிரபலம்.

உணவகங்களில்: சென்னையின் முக்கிய உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் புத்தாண்டு இரவு உணவிற்கு (New Year Dinner) 10% முதல் 20% வரை தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. உங்கள் குடும்பத்தோடு ஷாப்பிங் முடித்துவிட்டு நிம்மதியாக டின்னர் சாப்பிட இதுவே சரியான நேரம்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram