Salem: சேலத்தில் ஏற்காடு மலையடிவாரத்தில் அழுகை நிலையில் இளம்பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது பாலியல் கொலை கொள்ளை என்பது அதிகரித்து வரும் நிலையில் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் குழந்தைகள் யாரும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் தான் தமிழ்நாடு தற்போது உள்ளது. இளம் குழந்தைகள் வெளியில் சென்றாலோ அல்லது பெண்கள் வெளியில் சென்றாலோ எங்கு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படுவார்களோ என்று பெற்றோர்கள் அஞ்சியே இருக்கும் நிலைதான் தற்போது நிலவி வருகிறது.
இந்நிலையில் சேலம் ஏற்காடு மலைப்பாதையில் நடந்த ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்த இளம் பெண் நான்கு நாட்களாக காணவில்லை என்ற தகவல் வெளியாகிய நிலையில், தீவிர தேர்தலுக்குப் பின் ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பள்ளத்தில் அந்தப் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணுடன் திருச்சி சேர்ந்த வாலிபர் ஒருவர் பேசி வந்த நிலையில் தற்போது அந்த வாலிபரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணைக்கு பின் அவருக்கு குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டதாகவும், மேலும் அந்தப் பெண்ணை ஏற்காட்டுக்கு அழகை ரசிக்க தான் கூட்டு சென்றேன் பிறகு மலையின் மீது இருந்து தள்ளி விட்டேன் எனவும் பதில்களை மாறி மாறி அந்த வாலிபர் கூறுவதாகவும் மேலும் கடுமையான விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை.