கிருஷ்ணகிரி: இன்ஸ்டாகிராம் காதலை திருட்டுத்தனமாக திருமணம் செய்ததோடு ஐந்து நாட்கள் தேன் நிலவும் கொண்டாடிய பிறகு காதல் மனைவியை மீண்டும் வீட்டில் விட்டுவிட்டு தப்ப முயன்று பெண் வீட்டாரிடம் வங்கமாக சிக்கிய ராணுவ மாப்பிள்ளை.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த ஓட்டப்பட்டடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணன் அக்னிபாத் ராணுவ வீரராக உள்ள இவர் மத்திய பிரதேஷ் மாநிலம் ஜபல்பூர் பணியில் இருந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகமான போச்சம்பள்ளி வடமலம் பட்டியைச் சேர்ந்த பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது தினமும் இன்ஸ்டாகிராமில் காதலியுடன் மெய் மறந்து சாட்டிங் செய்து வந்த பெரியண்ணனுக்கு காதலியை நேரில் சந்திக்க வேண்டும் கேட்க இதற்கிடையே தங்கள் மகள் இன்ஸ்டாகிராமில் மூழ்கி உருகி போவதை கண்ட அவரது பெற்றோர் வேறு ஒரு இடத்தில் பலன் பார்த்து உள்ளனர் தனக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்து விட்டதாக அந்த பெண் பெரியண்ணனிடம் தெரிவித்திருக்கிறார்.
இதை எடுத்து 15 நாட்கள் அவசர விடுப்பு போட்டு வந்த வெறி கண்டன் 28ஆம் தேதி வீட்டுக்கு தெரியாமல் ஏலகிரிக்கு அழைத்து சென்றுள்ளார் அங்குள்ள கோயிலில் வைத்து அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய பெரியண்ணன் அங்கிருந்து ஊட்டிக்கு அழைத்துச் சென்று ஐந்து நாட்களில் ஹனிமூன் கொண்டாடியதாக கூறப்படுகிறது பின்னர் சம்பவத்தன்று காதல் மனைவியுடன் தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் அந்த பெண்ணை பெரியண்ணனின் பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.
இதை எடுத்து அந்த பெண்ணிடம் தனக்கு விடுமுறை விரைவாக முடிய இருப்பதால் அடுத்த விடுமுறையில் மீண்டும் சந்திக்கலாம் அதுவரை உனது வீட்டில் இரு என்று சொல்லி கம்பி நீட்ட திட்டமிட்டார் பெரியண்ணன் அவரது கழுத்தில் கட்டிய தாலியையும் கழட்டி விட்டு நல்ல பிள்ளையாக அவரை வீட்டில் விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது பெண் வீட்டார் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தங்கள் மகளை திருமணம் செய்து ஐந்து நாட்கள் குடித்தனம் நடத்தி விட்டு தப்பிக்க பார்ப்பதாக வெறி கண்ணன் மீது பெண் வீட்டார் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் விட்டு சென்றால் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிய வேண்டி வரும் என்று போலீசார் எச்சரித்ததால் தங்கள் வீட்டு பிள்ளைக்கு வேலை போய் விடுமோ என்று அஞ்சி பெரியண்ணன் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அந்த பெண்ணை மருமகளாக அழைத்துச் செல்ல சம்மதித்தனர் பெற்றோர் முன்பு மீண்டும் தாலி கட்டிய பெரியண்ணன் தான் அடுத்த விடுமுறையில் ஊரைக் கூட்டி திருமணம் செய்து கொள்வதாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு சென்றார்.