பகவந்த் கேசரில ஒன்னும் இல்லையே.. ஜனநாயகனுக்கு ஏன் தடை?? சீமான் அண்ணனின் செம லோக்கல் ரிவியூ!!

NTK Seeman, Vijay, Jananayagan, Censor Issues, Tamil Cinema News.

ஏ-வா? யு/ஏ-வா எதையாவது கொடுத்துத் தொலைங்க  தணிக்கை வாரியத்தைக் கலாய்த்த சீமான்

சென்னை: நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jana Nayagan), தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் சந்தித்து வரும் முட்டுக்கட்டைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது பாணியில் அதிரடியான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஒன்னும் இல்லையே மச்சீ: இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ (Bhagavanth Kesari) படத்தின் ரீமேக் அல்லது அந்தப் படத்தின் தழுவல் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சீமான் அந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், “நான் பகவந்த் கேசரி படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உணர்வுப்பூர்வமான உறவும், சில அதிரடி காட்சிகளும் தான் இருக்கின்றன. அரசுக்கு நெருக்கடி தரும் அளவிற்கு அல்லது தணிக்கை செய்யத் துடிக்கும் அளவிற்கு அதில் பெரிதாக ஒன்றுமில்லை” என்றார்.

இழுத்தடிக்காதீங்க: தொடர்ந்து பேசிய அவர், “படத்தில் ஏதோ அரசியல் வசனங்கள் இருக்கிறது என்பதற்காகச் சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பது சரியல்ல. படம் பார்த்தார்களா? ஏ சான்றிதழ் அல்லது யு/ஏ சான்றிதழ் என எதையாவது கொடுத்துத் தொலைய வேண்டியது தானே? அதை விட்டுவிட்டு இப்படி முடக்கி வைப்பது வேடிக்கையாக இருக்கிறது” எனச் சீமான் காட்டமாகத் தெரிவித்தார்.

யாரைப் பார்க்கப் போறாங்க?: விஜய்யின் அரசியல் வருகைக்கும், இந்தப் படத்திற்கும் முடிச்சுப் போட்டு மத்திய அரசு விளையாடுவதாகச் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக, காங்கிரஸ், இப்போது சீமான் எனப் பலரும் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவது, ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கை வாரியம் விரைவில் சான்றிதழ் வழங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram