மெரினாவில் குப்பை போட்டால் ரூ.5000 அபராதம்!! சென்னை மாநகராட்சி அதிரடி.. இனி பீச் போறவங்க இதைப் படிங்க!!

சுத்தமான கடற்கரை. கடுமையான அபராதம்- குப்பை கொட்டினால் ரூ.5,000 ஃபைன் சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு.

சென்னை:

சென்னை மாநகரின் அடையாளமான மெரினா, எலியட்ஸ் (பெசன்ட் நகர்) மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளைத் தூய்மையாகப் பராமரிக்க சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

புதிய விதிகள் என்ன?

* குப்பைத் தொட்டிகள் கட்டாயம்: பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள், உணவுப் பொருட்கள் மற்றும் இதர குப்பைகளை அங்கங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் (Dustbins) மட்டுமே போட வேண்டும்.

* கடுமையான அபராதம்: கடற்கரை மணல் பரப்பு அல்லது பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு உடனடியாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

* கண்காணிப்பு தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சீருடை அணியாமல் சாதாரண உடையில் கடற்கரைகளில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

ஏன் இந்த நடவடிக்கை?

வார இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடற்கரைகளுக்கு வருவதால், டன் கணக்கில் குப்பைகள் சேருகின்றன. இது கடல் சூழலையும், அழகையும் கெடுப்பதால் இந்த ‘ஜீரோ டாலரன்ஸ்’ (Zero Tolerance) முறையை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram