பொங்கல் ஸ்பெஷல் பகற்கொள்ளை!! 3 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம்.. நெல்லைக்கு ரூ.4,200?? பயணிகள் கடும் அதிர்ச்சி!!

பண்டிகை கால “டிக்கெட்” தாராளம். ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டண உயர்வு – சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்.

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் இருந்த கட்டணத்தை விட தற்போது 3 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளை அதிரவைக்கும் கட்டணப் பட்டியல் (ஜனவரி 13 நிலவரம்):

நெல்லை  நாகர்கோவில்  ரூ. 1,400  ரூ. 4,200

மதுரை  ரூ. 1,200 , ரூ. 3,500

கோவை  ரூ. 1,000  ரூ. 3,000

அரசு பேருந்துகள் நிலவரம்:

தனியார் பேருந்துகளின் இந்த அநியாயக் கட்டண உயர்வுக்குப் பயந்து மக்கள் அரசு பேருந்துகளை நாடுகின்றனர். இதனைச் சமாளிக்கத் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 21,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆனாலும், முன்பதிவு இடங்கள் ஏற்கனவே நிரம்பி வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

பயணிகள் கோரிக்கை:

“ஒவ்வொரு பண்டிகைக்கும் இப்படி விதிகளை மீறி கட்டணத்தை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் கூடுதல் அதிகாரிகளை நியமித்து இந்தக் கொள்ளையைத் தடுக்க வேண்டும்” எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram