ஆசிரியர்களுக்குப் பொங்கல் பரிசு பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.15,000 சம்பளம் மருத்துவக் காப்பீடும் வழங்க தமிழக அரசு அதிரடி
திருச்சி: தமிழக பள்ளிக் கல்வித்துறையில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கோரிக்கைகளில் ஒன்றான பகுதி நேர ஆசிரியர்களின் ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முக்கிய அம்சங்கள்:
சம்பள உயர்வு: அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதியம், இனி ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மருத்துவக் காப்பீடு: ஊதிய உயர்வு மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன் கருதி அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு (Medical Insurance) வசதியும் செய்து தரப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
பணி நிரந்தரம் குறித்த நம்பிக்கை: படிப்படியாக ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், முதல்வரின் கவனத்திற்குச் சென்று இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் வரவற்பு: கடந்த பல ஆண்டுகளாக ரூ.10,000 மற்றும் ரூ.12,500 என்ற அளவில் ஊதியம் பெற்று வந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, இந்த ரூ.15,000 உயர்வு மற்றும் காப்பீடு அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த அறிவிப்பு வந்திருப்பது ஆசிரியர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.





