நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி!! ரூ.1.07 லட்சத்தைக் கடந்த தங்கம்.. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளி விலை!!

Gold Rate Hike, Silver Price Today, Chennai Gold Rates Jan 19 2026.

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம் (22 கேரட்):

  • சவரனுக்கு உயர்வு: ரூ.1,360

  • ஒரு சவரன் தங்கம்: ரூ.1,07,600

  • கிராமுக்கு உயர்வு: ரூ.170

  • ஒரு கிராம் தங்கம்: ரூ.13,450

வெள்ளி விலை நிலவரம்: தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று மலைக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

  • கிலோவுக்கு உயர்வு: ரூ.8,000

  • ஒரு கிலோ வெள்ளி: ரூ.3,18,000 (3.18 லட்சம்)

  • ஒரு கிராம் வெள்ளி: ரூ.318

விலை உயர்வுக்கு என்ன காரணம்?: அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றங்கள் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் பக்கம் திரும்புவதே இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.59,480-க்கு விற்ற ஒரு சவரன் தங்கம், இன்று ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிப் புதிய வரலாறு படைத்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram