மாநில மற்றும் மத்திய அரசு சார்பாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பாக பாமாயில் அரிசி என தொடங்கி பல பொருட்கள் வழங்குகின்றனர்.
முதலில் ரேஷன் அட்டை கொண்டு வந்தான் பொருள்கள் வழங்கி வந்த நிலையில் இதனை அப்டேட் செய்து ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனின் அடுத்த கட்டமாக பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்தினர்.
டெக்னாலஜிக்கு ஏற்பார் போல் தொடர்ந்து பலவித முன்னேற்றம் கண்ட நிலையில் பயோமெட்ரிக் முறையானது மிகவும் வயது முதிந்தோர்க்கு பொருந்துவதில்லை.
அவர்களின் கைரேகை பதிவாகுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு அடுத்த கட்டமாக கண்விழி பதிவு முறையை கொண்டு வந்தனர். இருப்பினும் ஒரு சில வயது மூத்த தரப்பினரால் நியாய விலை கடைக்கு கூட வர முடிவதில்லை.
அவ்வாறு இருப்பவர்களுக்கு வீடு தேடி நியாய விலைக் கடை பொருட்கள் அனைத்தும் செல்ல வேண்டும் என்பதற்காக உணவு விலை நுகர்வோர் சங்கமானது அங்கீகார சான்று என்ற ஒன்றை அறிமுகம் செய்தது.
அவர் சார்பாக அங்கீகார சான்றிதழில் பெரும் நபர் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இதை தருவதிலும் அலுவலக நிர்வாகிகள் காலதாமதம் செய்வதாக தொடர் புகார் வந்துள்ளது.
இதனை சரிகட்டும் முயற்சியில் தற்பொழுது தமிழக அரசு ஆனது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எந்த ஒரு அலுவலகத்திலும் அங்கீகாரச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை மாறாக அதிகாரப்பூர்வ இணையத்திலேயே www.tnpds.gov.in பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.





