விடுகொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை!! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது அமமுக.. டிடிவி தினகரன் உருக்கமான விளக்கம்!!

TTV Dhinakaran, AMMK, BJP Alliance, NDA, TN Election

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமமுக இனி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) அங்கமாகச் செயல்படும் என அறிவித்தார்.

டிடிவி தினகரன் பேட்டியின் முக்கிய அம்சங்கள்:

கூட்டணி அறிவிப்பு: “தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதற்கான தொடக்கத்தை நோக்கி அமமுக பயணிக்கும். அந்த இலக்கை அடைய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்.”

பங்காளி சண்டை: அதிமுக-வுடனான மோதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை மட்டுமே, அது தீராத பகை அல்ல. விட்டுக்கொடுப்பவர்கள் எப்போதும் கெட்டுப் போவதில்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பாஜக-வுடன் கைகோர்ப்பு: டெல்லியில் உள்ள பாஜக தலைமைக்கும், தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கும் வலுசேர்க்கும் வகையில் அமமுகவின் இந்த முடிவு அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கணக்கு: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் பாஜக கூட்டணியில் இணைந்திருப்பது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த ‘மெகா கூட்டணி’ தென் மாவட்டங்களில் திமுக-வுக்குக் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram