பெய்ஜிங்/சென்னை: ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையே பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுவதுதான். இதற்குத் தீர்வாக ரியல்மி நிறுவனம் ஒரு பிரம்மாண்டமான முயற்சியை எடுத்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள தனது புதிய மாடலில் 10,001mAh திறன் கொண்ட பேட்டரியைப் பொருத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போனின் சிறப்பம்சங்கள்:
ராட்சத பேட்டரி: சந்தையில் இருக்கும் மற்ற போன்களை விட இது இரண்டு மடங்கு அதிக பேட்டரி திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சாதாரணமாகப் பயன்படுத்தும் போது 4 முதல் 5 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும்.
ஃபாஸ்ட் சார்ஜிங்: இவ்வளவு பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும் என்பதால், இதில் 120W அல்லது 240W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட வாய்ப்புள்ளது.
ரிவர்ஸ் சார்ஜிங்: இந்த போனை வைத்தே மற்ற போன்களுக்கு சார்ஜ் செய்யும் ‘ரிவர்ஸ் சார்ஜிங்’ (Reverse Charging) வசதி இதில் மிகச் சிறப்பாகச் செயல்படும். அதாவது இந்த போன் ஒரு பவர் பேங்க் போலவே செயல்படும்.
டிசைன் சவால்: இவ்வளவு பெரிய பேட்டரி இருப்பதால் போன் கொஞ்சம் கனமாகவும் (Weight), தடிமனாகவும் (Thick) இருக்க வாய்ப்புள்ளது. இதைச் சரிசெய்ய ‘சிலிகான் கார்பைடு’ (Silicon Carbon) பேட்டரி தொழில்நுட்பத்தை ரியல்மி பயன்படுத்தலாம்.
யாருக்கு இது செட் ஆகும்? அதிகம் டிராவல் செய்பவர்கள், மணிக்கணக்கில் கேம் விளையாடுபவர்கள் மற்றும் அடிக்கடி சார்ஜ் போடப் பிடிக்காதவர்களுக்கு இந்த போன் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.


