ஊழலுக்கு எதிரான விசிலா??  சினிமா சென்டிமென்ட்டா??  தவெக-வின் விசில் சின்னத்திற்குப் பின்னால் இருக்கும் ஹிஸ்டரி!!

vijay-tvk-whistle-symbol-history-prakash-raj-mayilsamy-election-commission-rules

சென்னை (ஜனவரி 22, 2026): தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் வெற்றியைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றுள்ளார். நீண்ட இழுபறிக்குப் பிறகு, தவெக-விற்கு ‘விசில்’ (Whistle) சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது.

ஏற்கனவே ‘விசில்’ ஊதிய பிரபலங்கள்: விஜய்க்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இந்தச் சின்னம் அரசியல் களத்திற்குப் புதியதல்ல. இதற்கு முன்னதாகத் திரைத்துறையைச் சேர்ந்த இரு முக்கியப் பிரபலங்கள் இதே சின்னத்தில் களம் கண்டுள்ளனர்:

பிரகாஷ் ராஜ்: கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.

மயில்சாமி: 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியும் இதே ‘விசில்’ சின்னத்திலேயே போட்டியிட்டார்.

இருப்பினும், அவர்கள் இருவரும் சுயேச்சைகளாக ஒரு குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் நின்றனர். ஆனால், விஜய் ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாநிலம் முழுவதும் இந்தச் சின்னத்தைப் பயன்படுத்தப் போகிறார்.

விஜய்க்கு கிடைத்தது ‘பொதுச் சின்னம்’ – தொழில்நுட்ப விவரம்: அங்கீகாரம் பெறாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் (Registered Unrecognized Political Parties) தங்களுக்குப் பிடித்த சின்னத்தைப் பெற வேண்டுமென்றால், தேர்தல் ஆணையத்தின் விதி 10B-ன் படி விண்ணப்பிக்க வேண்டும்.

தவெக தரப்பு கடந்த நவம்பர் மாதமே ‘விசில்’ உள்ளிட்ட சில விருப்பச் சின்னங்களைச் சமர்ப்பித்தது.

ஒரு கட்சி மொத்த தொகுதிகளில் 5%-க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட்டால் அவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே சின்னத்தை வழங்கலாம் என்ற விதியின் கீழ், தற்போது 234 தொகுதிகளுக்கும் சேர்த்து ‘பொதுச் சின்னமாக’ (Common Symbol) விசில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாஸ் கனெக்ஷன்: சினிமாவில் விஜய்யின் ‘விசில்’ சத்தம் மிகவும் பிரபலம். குறிப்பாக அவரது ‘பகவதி’ முதல் சமீபத்திய ‘GOAT’ படம் வரை விசில் என்பது அவரது அடையாளமாகவே உள்ளது. இப்போது அந்த அடையாளமே அரசியல் சின்னமாகவும் மாறியிருப்பது தவெக தொண்டர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இது வெறும் விசில் அல்ல.. மாற்றத்திற்கான சங்கு” என தவெகவினர் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram