சென்னை: தல அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘மங்காத்தா’ தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஒரு திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருந்தபோது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டருக்குள் அதிரடி: மங்காத்தா படத்தின் மாஸ் சீன்களின் போது, தியேட்டரில் இருந்த விஜய் ரசிகர்கள் சிலர் திடீரெனத் தாங்கள் மறைத்து வைத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கொடியை விரித்துக் காட்டி, “TVK.. TVK..” எனப் பெரும் சத்தத்துடன் கோஷமிட்டுள்ளனர்.
அஜித் ரசிகர்கள் வார்னிங்: இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள், “இது எங்க தலைவன் படம் ஓடுற இடம், இங்க எதுக்குடா கொடியைக் காட்டுறீங்க? இது தேவையில்லாத வேலை” என எச்சரித்துள்ளனர். இதனால் தியேட்டருக்குள்ளேயே வாக்குவாதம் வெடித்தது.
வெளியே நடந்த மோதல்: படம் முடிந்து ரசிகர்கள் வெளியே வந்தபோது, மீண்டும் விஜய் ரசிகர்கள் தவெக கொடியைக் காட்டி கத்தியுள்ளனர். இதனால் பொறுமையிழந்த அஜித் ரசிகர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அது கைக்கலப்பாக மாறியது.
வைரலாகும் வீடியோ: இந்த மோதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. “சினிமாவை சினிமாவாகப் பாருங்கள், அரசியலைத் தியேட்டருக்குள் கொண்டு வராதீர்கள்” எனப் பொதுமக்களும் நடுநிலை ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


