அமெரிக்கா சென்று செட்டில் ஆகலாம்” என்று கனவு காணும் இந்திய இளைஞர்களுக்கு 2026-ன் தொடக்கம் ஒரு கசப்பான மருந்தாக அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசான், தற்போது 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது வெறும் பொருளாதாரச் சரிவு மட்டுமல்ல, ‘மனிதர்களுக்குப் பதில் மெஷின் (AI)’ என்கிற தாரக மந்திரத்தின் விளைவு.
அமேசான் நிறுவனத்தில் மட்டும் இந்த நிலை என்றால், மற்ற பெரிய நிறுவனங்களும் (Google, Meta) இதைப் பின்பற்ற வாய்ப்புள்ளது. இதனால் பெங்களூரு முதல் ஹைதராபாத் வரை உள்ள இந்திய ஐடி ஊழியர்கள் இப்போதே தங்களது “லிங்டின்” (LinkedIn) புரொஃபைல்களை அப்டேட் செய்யத் தொடங்கிவிட்டனர்.
இன்னொரு பக்கம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண அரசு எடுத்துள்ள முடிவு இடி போல இறங்கியுள்ளது. எச்-1பி (H-1B) விசாக்களை முடக்குவதாக அந்த மாகாண கவர்னர் அறிவித்துள்ளார். டிரம்ப் 2.0 நிர்வாகம் வந்த பிறகு, “அமெரிக்கர்களுக்கே வேலை” (America First) என்ற கொள்கை தீவிரமடைந்துள்ளது.
டெக்சாஸ் என்பது இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வாழும் மாகாணம். அங்கு விசா முடக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகு அங்கே வேலை பார்க்க முடியாது. அவர்கள் இந்தியாவுக்கே திரும்ப வேண்டிய சூழல் உருவாகும்.
இந்த இரட்டைத் தாக்குதலால் இந்திய ஐடி நிறுவனங்களின் (TCS, Infosys) வருவாயும் குறைய வாய்ப்புள்ளது. இதுவரை “அவுட்சோர்சிங்” (Outsourcing) மூலம் லாபம் ஈட்டிய நிறுவனங்கள், இப்போது அமெரிக்காவின் இந்தத் தீவிரப் போக்கால் தங்களது பிசினஸ் மாடலை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
ஐடி ஊழியர்கள் இனி “ஸ்கில்” (Skill) வளர்த்துக் கொள்வது மட்டுமே தப்பிக்க ஒரே வழி. இந்த விசா விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை தலையிட்டு தீர்வு காணுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.


