சென்னை: சென்னைமாதவரத்தைச் சேர்ந்த அப்துல் மாலிக் என்ற இளைஞர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் நிலைகள் கடந்த மூன்றாம் தேதி என்று காலையில் ஈக்காட்டுத்தாங்கலில் பயணிகளை ஆட்டோவில் இறக்கிவிட்டு கிண்டி மெட்ரோ வழியாக சென்றுள்ளார். அப்போது பதற்றத்தோடு நின்று கொண்டிருந்த தாயும் மகனும் அப்துல் மாலிக் ஆட்டோவை கையை காட்டி மரித்து பாரிஸ் செல்லுமாறு கூறியுள்ளனர்.
ஆட்டோவில் ஏறிய சில நிமிடங்களிலேயே அந்த தாய் மகனிடம் அப்பாவை கொன்னுட்டியேடா என கூறியதைக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் பதறி உள்ளார் எங்க உடனே ஆட்டோவை நிறுத்தினால் உஷார் ஆகி விடுவார்கள் என சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர் உடனே ஆட்டோவில் இருந்த இளைஞரிடம் ஆறுதலாக பேசி அவரின் அண்ணனின் மொபைல் எண்ணை வாங்கி உள்ளார். அவரது அண்ணனுக்கு பின்னர் போனில் ஆட்டோ ஓட்டுனர் தகவல் தெரிவித்த பின்னர் வீட்டில் ரத்த காயத்தோடு கிடந்த தந்தையை இளைஞரின் அண்ணன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் சிகிச்சை பலன் இன்றி தந்தை உயிருள்ளது தெரியவந்துள்ளது இதனை அறிந்த ஆட்டோ ஓட்டுனர் வாகனத்தை வழியில் எங்கும் நிறுத்தாமல் ஆறுதலாக பேசிக்கொண்டே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் வளாகத்திற்குள் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த போலீசார் இருவரையும் மடக்கிப்பிடித்தார் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் 30வது தெருவில் வசித்து வந்த 66 வயதான முரளிதரன் என்பவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளன இரண்டாவது மகன் ஆதித்ய நாராயணன் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக அடிக்கடி தந்தையிடம் பணம் கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி முரளிதரன் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆதித்ய நாராயண கத்தியால் தனது தந்தையை உடல் முழுவதும் குத்தியது தெரிய வந்துள்ளது இதனைத் தொடர்ந்து தனது தாயுடன் பாரிஸில் உள்ள வழக்கறிஞரை பார்க்க ஆட்டோவில் சென்றது தெரியவந்துள்ளது கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் பாராட்டி வருகின்றனர்.





