பேட்டரி காலியாகாது.. கவலையே இல்லை!! 10,001mAh ராட்சத பேட்டரி.. ரியல்மி P4 பவர் 5ஜி அறிமுகம்!! விலை மற்றும் அதிரடி சலுகைகள்!!

ealme P4 Power 5G

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ரியல்மி நிறுவனம், தனது புதிய ‘P’ சீரிஸ் மாடலான Realme P4 Power 5G-யை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் ஹைலைட்டே இதன் 10,001mAh “Titan” பேட்டரி தான். இந்தியாவில் இவ்வளவு பெரிய பேட்டரியுடன் அறிமுகமாகும் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இதுவாகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 32 மணிநேரம் வீடியோ பிளேபேக் மற்றும் 39 நாட்கள் ஸ்டாண்ட்பை நேரத்தை இது வழங்கும் என நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • டிஸ்ப்ளே: 6.8 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 6500 nits பீக் பிரைட்னஸ்.

  • சிப்செட்: மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (MediaTek Dimensity 7400 Ultra).

  • பேட்டரி & சார்ஜிங்: 10,001mAh சிலிகான் கார்பன் பேட்டரி, 80W அல்ட்ரா சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி.

  • கேமரா: 50MP Sony IMX882 மெயின் கேமரா (OIS வசதியுடன்) + 8MP அல்ட்ரா வைட். முன்பக்கத்தில் 16MP செல்பி கேமரா.

  • பாதுகாப்பு: IP69/IP68/IP66 தரச்சான்றிதழ் பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி.

  • OS: ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான Realme UI 7.0.

விலை மற்றும் விற்பனை: இந்த போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது:

  1. 8GB + 128GB: ரூ. 25,999

  2. 8GB + 256GB: ரூ. 27,999

  3. 12GB + 256GB: ரூ. 30,999

அறிமுக சலுகையாக ரூ. 2,000 வங்கி தள்ளுபடி அல்லது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இதனால் அடிப்படை மாடலை ரூ. 23,999-க்கு வாங்க முடியும். வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் இதன் விற்பனை தொடங்குகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram