கிரிக்கெட் : ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி முதல் அரை இறுதிப் போட்டியில் விளையாடிய பின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தன. தற்போது அரையிறுதி முதல் போட்டி முடிவுற்ற நிலையில் நேற்று இரண்டாவது அரையிறுதி போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணி இடையில் நடைபெற்றன. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி இந்திய அணி அபார வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் நேற்று நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி தொடங்கியது இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது இதில் ரச்சின் ரவீந்திர மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் சதங்கள் விளாசி அணியின் இலக்கை உயர்த்தினர். 50 ஓவர் முடிவுற்ற நிலையில் அணியின் எண்ணிக்கை 362 என இதுவரை எந்த அணியும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அடிக்க முடியாத அளவிற்கு ரன் எடுத்து சரித்திர சாதனையை படைத்தது நியூசிலாந்து அணி.
பெரிய இலக்குடன் பேட்டிங் இறங்கிய சவுத் ஆப்பிரிக்கா அணி 312 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது இதனால் நியூசிலாந்து அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோத உள்ளது தென்னாப்பிரிக்கா அணி வெளியேறியது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.





