கடைசி ஓவர் வரை திக் திக்!! பெத்தேல் சதம் அடித்தும் பலனில்லை!! டி20 உலகக்கோப்பை பைனலில் இந்தியா!!

India vs England T20 Semi Final 2026 result Sanju Samson 89

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சனின் மிரட்டலான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் வெறும் 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசினார். இவருக்குத் துணையாக ஷிவம் துபே 43 ரன்களும், இஷான் கிஷன் 39 ரன்களும் எடுத்து ரன் வேகத்தை அதிகரித்தனர்.

254 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணிக்கு, ஜேக்கப் பெத்தேல் (Jacob Bethell) 48 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து பெரும் அதிர்ச்சி கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தியின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியை 20 ஓவர்களில் 246 ரன்களுக்குள் இந்தியா கட்டுப்படுத்தியது. இறுதி ஓவர்களில் ஏற்பட்ட பரபரப்பிற்குப் பிறகு, இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram