விடைபெறுகிறேன்.. வங்கதேச ஜாம்பவான் ஓய்வு!! இது எனக்கு சவாலாக தான் இருந்தது!!

bangladesh-legend-retires

கிரிக்கெட் : வங்கதேச அணியின் வீரர் முஷ்பிகுர் ரஹீம் தற்போது ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 வங்கதேசத்தின்  முக்கிய வீரர்கள் ஒருவர்தான் முஷ்பிகுர் ரஹீம். இவர் வங்கதேசத்தின்  பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர். இவர் தற்போது ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் அது மட்டுமல்லாமல் கடைசி சில போட்டிகள் தனக்கு மிகவும் சவாலானதாக தான் இருந்தது இந்நிலையில் நான் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

இவருக்கு 37 வயதாகும் நிலையில் இவர் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு எடுக்கும் முடிவை எடுத்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில் நான் தற்போது ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறேன் நான் போட்டியில் விளையாடும் போதெல்லாம் என்னால் முடிந்த அளவுக்கு நூறு சதவீதம் சிறப்பாக விளையாடினேன் கடைசி நேரம் தான் எனக்கு சற்று சவாலாக இருந்தது என்னை சுற்றி இருக்கும் அனைவருக்கும் நன்றி.

இவர் வங்கதேசத்துக்காக இதுவரை 274 ஒரு நாள் போட்டியில் விளையாடி உள்ளார் இவரின் மொத்த ரன் 7795. இதில் மொத்தம் ஒன்பது சதங்களும் 49 அரை சதங்கள் எஅடித்துள்ளார். வங்கதேச அணியில் வங்கதேசத்துக்காக அதிக ஒரு நாள் போட்டியில் ரன் அடித்த பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் விக்கெட் கீப்பராக 243 பேச்சுகளை பிடித்துள்ளார் மேலும் 56 ஸ்டம்பிங் களையும் செய்திருக்கிறார். தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் விளையாட இரண்டு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram