கிரிக்கெட் : தென்னாபிரிக்க அணி இதுவரை அரையிறுதி மற்றும் இறுதி போட்டி உள்ள வரை சென்று வெளியேறுவதை வழக்கமாக தொடர்ந்து வருகிறது.
2025 ஆம் ஆண்டு தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான அரையிறுதி போட்டியில் நேற்று நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இரு அணிகளும் மோதின இந்த போட்டியில் முதல் நியூசிலாந்தின் பேட்டிங் செய்து 362 ரன்கள் சேர்த்தது. இரண்டாவதாக களமிறங்க தென்னாபிரிக்க அணி 312 ரன்களில் ஆட்டம் இழந்து தோல்வியை தழுவியது.
இந்த தோல்வியின் மூலம் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப் போட்டிச் செல்லும் வாய்ப்பு இருந்து வெளியேறி உள்ளது. இதனால் இறுதிப் போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி மோத உள்ளது. தென்னாபிரிக்க அணி இதுவரை ஐசிசி உலக கோப்பை தொடர்களில் நான்கு அரை இறுதிப் போட்டியும் ஒரு இறுதிப் போட்டிகள் சென்று தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது.
முதலில் ஐசிசி t20 உலக கோப்பை பங்களாதேஷ் நடத்திய போட்டியில் இந்திய அணியுடன் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இரண்டாவதாக ஐசிசி உலகக் கோப்பை 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதி தோல்வி அடைந்து வெளியேறியது. அடுத்ததாக ஐசிசி உலகக் கோப்பை 2023 ஆஸ்திரேலிய அணியுடன் மோதி அரையிறுதி போட்டியில் வெளியேறியது. அடுத்ததாக ஐசிசி உலகக் கோப்பை 2024 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியை தழுவியது.
தற்போது நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டாவது அரையா எழுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதி தோல்வி தழுவி வெளியேறியுள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மற்றும் நன்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் வருத்தப்படும் ஒரு அணியாக தென்னாப்பிரிக்க அணி உள்ளது





