மீண்டும் தொடங்கும் லாக்டவுன்??குழப்பத்தில் மக்கள்!!

இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக ஹோட்டல்கள், சிறிய உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பல இடங்களில் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படத் தொடங்கியுள்ளன.

சில இடங்களில் உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தேநீர், சமோசா, பஜ்ஜி போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலை 30 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல ஹோட்டல்கள் சிலிண்டர் கிடைக்காத காரணத்தால் மெனுவில் உள்ள உணவுப் பட்டியலைக் குறைத்து செயல்படுகின்றன. சில உணவகங்கள் மாற்று ஏற்பாடாக விறகு அடுப்புகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. பெரிய நகரங்களில் உள்ள உணவு விநியோக சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர், புனே உள்ளிட்ட நகரங்களில் டெலிவரி பணிகள் 50 முதல் 60 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு குடும்ப பயன்பாட்டுக்கான எல்பிஜி விநியோகத்தில் பற்றாக்குறை இல்லை என்று உறுதியளித்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதால், குடும்பங்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் சிலிண்டர்கள் கிடைக்கின்றன. அதேவேளை, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் சிரமம் தொடர்கிறது என்று ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்கள் கூறுகின்றன.

அதிகப்படியான முன்பதிவுகளை கட்டுப்படுத்த அரசு காத்திருப்பு காலத்தை உயர்த்தியுள்ளது. எல்பிஜி ரீஃபில் புக்கிங்கிற்கான காத்திருப்பு காலம் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், இதனுடன் குடும்ப பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், விநியோகத்தை சீராக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படுவதால் மக்கள் குழப்பத்துடன் இருந்து வருகி்ன்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram