இங்கே தான் சாமானியர்கள் தலைமைக்கு வர முடியும்!! அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!!

kaliammal-joins-admk-eps-presence-ntk-resignation-tamil-nadu-politics-2026

தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, நாம் தமிழர் கட்சியின் முன்னணிப் பேச்சாளராகவும், மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைந்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், அவருக்குச் சால்வை அணிவித்துத் தன்னை அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைத்துக் கொண்டார். நீண்ட காலமாக நாம் தமிழர் கட்சியில் சீமானுக்குப் பக்கபலமாக இருந்த காளியம்மாள், திடீரென அந்த அமைப்பிலிருந்து விலகி அதிமுகவைத் தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள், “அதிமுக ஒரு மக்கள் இயக்கம். இங்கே மட்டும்தான் சாமானியர்களாலும் தலைமையை எட்ட முடியும். தமிழக மக்கள் தற்போது ஒரு பெரிய ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். இந்த முடிவு எனது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது மட்டுமல்ல, மக்களின் உணர்வுகளைப் புரிந்தே எடுத்துள்ளேன். கட்சியில் எனக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பதை அதிமுக தலைமை விரைவில் அறிவிக்கும்” எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறி வரும் நிலையில், காளியம்மாளின் இந்த முடிவு அந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவாகவும், அதிமுகவுக்குக் கூடுதல் பலமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்கப் பேச்சாளராகக் கருதப்படும் காளியம்மாள், வரும் தேர்தல்களில் அதிமுகவின் வெற்றிக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram