சினிமா : ஆர் ஜே பாலாஜி தற்போது சூர்யாவின் சூர்யா 45 திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் முன்னணி நடிகர்களுள் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. இவருக்கு தற்போது அடுத்ததாக ரெட்ரோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சூர்யா தற்போது சூரியன் 45 திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். தற்போது சூர்யா 45 திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் என்ன என்பது தற்போது கசிந்துள்ளது.
சூர்யாவுக்கு கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை ஒரு தோல்வி படமாகவே அமைந்தது. அதன்பின் திரைப்படங்களை பார்த்து பார்த்து முடிவு செய்து வருகிறார். கங்குவாவிற்கு பின் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார் அடுத்து ரிலீசாக தயாராக உள்ளது.
இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யா எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. சூர்யா 45 திரைப்படத்தில் சூர்யா வக்கீல் ஆகவும் அய்யனார் ஆகவும் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை ஒரு ஆன்மீக கதை கலந்த கதையாகவே உருவாக்கி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி என கூறப்படுகிறது.