cinema: தமிழ் சினிமாவில் முன்னுரி நடிகர்களுள் மிக முக்கியமானவர் தான் தனுஷ் இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் பாடகராகவும், பல திறமைகள் கொண்ட கலைஞராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஒரு இயக்குனராக கவனம் செலுத்தி வருகிறார் இவர் கடைசியாக இயக்கிய நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
தனுஷ் இதற்கு முன் பவர் பாண்டி ராயன் என வெற்றி படங்களை இயக்கியுள்ளார் அந்த வரிசையில் தான் தற்போது நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்று திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக அவரின் அக்கா மகன் பவிஷ் என்ற இளைஞரை அறிமுகம் செய்து வைத்தார். தற்போது நிலைமைக்கு ஏற்றவாறு 2கே கிட்ஸ் வாழ்வில் உள்ள காதல் எப்படி இருக்கும் என்பதை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை உருவாக்கினார் தனுஷ்.
இந்த திரைப்படத்தின் விமர்சனங்களை பார்க்கும் பொழுது தற்போது உள்ள 2k கிட்ஸ்க்கு மட்டும் தான் இந்த திரைப்படம் ஏதோ பிடித்திருந்தது போல் தெரிகிறது மற்ற 90s கிட்ஸ் களுக்கு இந்த திரைப்படம் அவ்வளவாக பிடிச்சது என தோன்றவில்லை. ஏனென்றால் அது போல தான் கலவையான விமர்சனங்கள் இந்த திரைப்படம் பெற்றது.
இந்த திரைப்படத்தை தயாரித்தது தனுஷ் தான் இது குறித்து தனஜெயன் பேசுகையில் இந்த திரைப்படம் தனுசுக்கு லாபம் தான். இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 15 கோடி. இதை அவர் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் மூலமாகவே எடுத்துவிட்டார் திரையரங்குகளில் வசூலித்த அனைத்தும் லாபம் தான். எனவே இந்த திரைப்படம் தனுஷுக்கு லாபம் தான் என தனஞ்செயன் கூறியுள்ளார்.