பிரபல ரவுடி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை!! ஒருவருக்கு தூக்கு தண்டனை!!

4-people-sentenced-to-life-in-murder-case

Tirunelveli: திருநெல்வேலியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையம் பாளையம்செட்டிகுளத்தை சேர்ந்த வைகுண்டம் இவருக்கு வயதை 45 இவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.மேலும் ஊராட்சி மன்ற தேர்தலில் ஒரே சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட சண்டையில் கொலை மற்றும் வெட்டு குத்து வழக்குகளில் இவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

இதன் அடிப்படையில் அந்த வழக்கிற்கு 2022 ஆம் ஆண்டு 10 தேதி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியினை கூற இருந்தார். இவர் சாட்சியை கூறினால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்டனை கிடைக்கும் என்ற உள்நோக்கத்தில் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கால்வாயில் குளிக்க சென்ற போது சரியாக திட்டமிட்டு அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதன் அடிப்படையில் திருநெல்வேலி காவல் துறையினர் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 8 பேரை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி இரண்டாவது மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேஷ் குமார் இந்த வழக்கில் குற்றவாளியான செல்வராஜ்க்கு தூக்கு தண்டனை அறிவித்தார். மேலும் அந்தோணி பிரபாகர், அருள்பிலிப்ஸ், ஆண்டே நல்லையா மற்றும் பாபு அலெக்சாண்டர் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார்.

மேலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் செல்வ லீலா மற்றும் ஜாக்லின் இருவருக்கும் இரண்டு மாத தண்டனை தீர்ப்பளித்தார். இரு வெவ்வேறு சமூகத்தினர் இடையே நடந்த மோதல்களில் நீதிபதி கடுமையான தீர்ப்பை வழங்கியதால் திருநெல்வேலி இரண்டாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram