தந்தையை பார்சல் செய்த மகள்!! அதிர்ச்சியான பின்னணி??

பெங்களூரு நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. வயதான தந்தையை சாக்குமூட்டையில் கட்டி, விநாயக் சர்கிள் பகுதியில் உள்ள பார்சல் ஆபீஸ் அலுவலகத்துக்கு கொண்டு வந்து மங்களூருக்கு அனுப்புமாறு ஒரு பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்சல் அலுவலக ஊழியர்களுக்கு மூட்டையின் உள்ளே என்ன உள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டதால் அதை திறந்து காட்டுமாறு கேட்டுள்ளனர். முதலில் வீட்டுப் பொருட்கள் என்று கூறியிருந்தாலும், மூட்டையை திறந்தபோது அதற்குள் மூச்சுத் திணறலுடன் ஒரு முதியவர் இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதியவரின் நிலை சோர்வாக இருந்ததால் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவிய ஊழியர்கள், மனிதர்களை பார்சலாக அனுப்ப முடியாது என்று தெளிவுபடுத்தினர். இருந்தபோதிலும், அந்த குடும்பத்தினர் வேறு பார்சல் கம்பெனி மூலம் அனுப்ப முயற்சிப்பதாக கூறி அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்ததுடன், சிலர் அதை செல்போனில் பதிவு செய்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பண்டிகை காலத்தில் பேருந்து கட்டணம் கடுமையாக உயர்ந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இவ்வாறு செய்ததாக அந்த பெண் விளக்கம் அளித்துள்ளார். அதிக கட்டணத்தால் தந்தையை மங்களூரு அனுப்ப முடியாததால் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டாலும், இந்த நடவடிக்கை விழிப்புணர்வா அல்லது சமூக வலைதள கவன ஈர்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram