Edapadi: தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவை விமர்சித்துள்ளார்.*
*செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5 வயது சிறுமிக்கு கூட பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
*ஈரோடு மாவட்டம் பவானி அருகே சிறுமிக்கு பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை
*பரமக்குடியில் பட்ட பகுதியில் நடு ரோட்டில் வழக்கறிஞரை சராமாறியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
*மயிலாடுதுறையில் ஆசிரியருக்கு 25 இடத்தில் கொடூரமான முறையில் கத்தி குத்து நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் மாடல் ஆட்சி திமுக ஆட்சி என்பது குறிப்பாக குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு துளியும் கூட இல்லை என்று தினமும் நடக்கும் செய்திகளே உண்மையைச் சொல்லும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகின்றார்.
மேலும் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் தமிழக முதலமைச்சர் எம்.கே ஸ்டாலினுக்கும் நடக்கும் பிரச்சனைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லாதது போல் இது போன்ற விஷயங்களை கடந்து விட்டு சம்பந்தமே இல்லாத விஷயங்களை முன்னிலைப்படுத்துகிறார் .
இது மன்னிக்க முடியாத துரோகம் என்று கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இரும்பு கரத்தின் துருவை துடைத்தெறிந்து செயல்படுமாறு போலி போட்டோ சூட் அப்பா என்று எடப்பாடி பழனிச்சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவை பகிர்ந்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவிற்கு தமிழக முதல்வர் சரியான பதிலை அளிப்பார் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.