தமிழகத்தில் நிலம் அல்லது வீடு வாங்க/விற்க திட்டமிட்டு உள்ளவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 1, 2026 முதல் பத்திரப்பதிவு முறையில் பல மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.
பல ஆண்டுகளாக மாற்றம் இன்றி இருந்த வழிகாட்டி மதிப்பு (Guideline Value) உயர்த்தப்பட இருப்பதால், பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், சொத்து வாங்குபவர்கள் கூடுதல் செலவை சந்திக்க வேண்டியிருக்கும் நிலமை உருவாகும்.
மார்ச் 31க்குள் பதிவு செய்தால் பழைய கட்டணம் மட்டுமே பொருந்தும். ஏப்ரல் 1க்கு பிறகு பதிவு செய்தால் புதிய உயர்ந்த மதிப்பின் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், பத்திரப்பதிவு செய்யப்பட்ட உடன் பட்டா தானியங்கி மாற்றம் செய்யும் வசதி அறிமுகமாகிறது. ஆனால், EC (வில்லங்கச் சான்றிதழ்) அல்லது நில விவரங்களில் பிழைகள் இருந்தால் இந்த வசதி செயல்படாது என்பதால் முன்கூட்டியே சரிபார்ப்பு அவசியம். அதேபோல், DTCP / CMDA அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலாகும். இதனால், அங்கீகாரம் இல்லாத நிலங்களில் முதலீடு செய்வோர் சிக்கலில் சிக்க வாய்ப்பு உள்ளது.
நிபுணர்கள் ஆலோசனை:
மார்ச் 31க்குள் பதிவு செய்தால் பணம் மிச்சமாகும்
ஆவணங்களை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் மற்றும்
வழக்கறிஞர் அல்லது ஆவண எழுத்தரிடம் ஆலோசனை பெறுவது நல்லது எனவே, சொத்து தொடர்பான நடவடிக்கைகளை தாமதிக்காமல் இந்த மாதத்திற்குள் முடிப்பது பாதுகாப்பான மற்றும் சிக்கனமான முடிவாக இருக்கும்.


