Annamalai: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவை சரமாரியாக தாக்கியுள்ளார். 2016 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை சோதனை செய்துதற்கு தமிழக அரசு தலைகுனியே வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார். ஆனால் இன்று தமிழ்நாட்டை ஊழல் நாடாக மாற்றி அரசு நிறுவனங்களில் எல்லாம் கமிஷன் மண்டிகளாக இயக்குவதின் விளைவுதான் இன்று அமலாக்க துறையின் அதிரடி சோதனை என்று திமுகவை விமர்சித்துள்ளார்
சென்ற ஆண்டு சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தீர்ப்பில் ஜெயிலுக்குச் சென்ற செந்தில் பாலாஜி பெயிலில் தற்போது டாஸ்மாக் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடு மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் வீட்டிலும் அமலாக்கத்துறை இன்றும் கூட சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து செந்தில் பாலாஜி ஆதாரவாளர் கரூர் ராயினூர் கொங்கு மெஸ் மணி மற்றும் சக்தி மெஸ் சக்திவேல் மேலும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரான எம்.சி எஸ் சங்கர் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையின் கீழ் இருக்கும் டாஸ்மார்க் தலைமை அலுவலகத்திற்கு அமலாக்கத்துரை சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனை தமிழகத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 2026 தலைமைச் செயலகத்தில் நடத்திய சோதனைக்கு குற்றம் சாட்டினீர்களே இன்று நடப்பது என்ன என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கு பெரும் தலைகுனிவென்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.