நேற்று தங்கம் சந்தையில் நடந்த விலை மாற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காலை மற்றும் பிற்பகலில் கடுமையாக சரிந்த தங்கம் விலை, மாலை நேரத்தில் திடீரென உயர்ந்து புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து ரூ.12,950 ஆகவும், பவுனுக்கு ரூ.5,360 குறைந்து ரூ.1,03,600 ஆகவும் விற்பனையானது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் அதே நாளில் பிற்பகல் மீண்டும் விலை சரிந்து, ஒரு கிராம் ரூ.12,670 குறைந்து பவுனுக்கு ரூ.1,01,360 ஆக குறைந்தது. இதனால் ஒரே நாளில் மொத்தம் ரூ.7,600 வரை தங்கம் விலை சரிந்தது.
இந்நிலையில் மாலை நேரத்தில் உலக அரசியல் சூழ்நிலை திடீரென திருப்பம் பெற்றது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியான உடன், தங்கம் விலை உடனடியாக உயர்ந்தது.
மாலை 5.30 மணியளவில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.13,340 ஆகவும், பவுனுக்கு ரூ.5,360 உயர்ந்து ரூ.1,06,720 ஆகவும் விற்பனையானது. அது மட்டுமில்லாமல்
வெள்ளி விலையும் இதேபோல் மாற்றம் கண்டது. காலை சரிந்த வெள்ளி விலை, மாலையில் மீண்டும் உயர்ந்து கிராமுக்கு ரூ.250 மற்றும் கிலோக்கு ரூ.2.50 லட்சம் ஆகியது.
ஒரே நாளில் மூன்று முறை விலை மாற்றம் ஏற்பட்டதால், நகை வாங்குவோர் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். சர்வதேச அரசியல் நிலைமைகள் தங்கம் விலையை நேரடியாக பாதிக்கின்றன என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


