தளபதியின் தேர்தல் வேட்டை ஆரம்பம்!! கொளத்தூர் முதல் விருகம்பாக்கம் வரை.. விஜய்யின் அதிரடிப் பிரசாரத் திட்டம்!!

tvk-vijay-election-campaign-chennai-perambur-kolathur-march-28-2026-schedule

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை அதிரடியாகத் தொடங்குகிறார். நாளை மறுநாள் (மார்ச் 28, 2026, சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னையின் பெரம்பூர் – எம்.கே.பி நகர் (MKB Nagar) பகுதியில் இருந்து தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்குகிறார். விஜய் இந்தப் பெரம்பூர் தொகுதியில்தான் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், இப்பகுதி தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரம்பூரைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர், பின்னர் வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் இறுதியாக விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் அவர் சூறாவளிப் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

ஒரே நாளில் ஐந்து தொகுதிகளில் பிரசாரம் செய்வதன் மூலம் சென்னையின் இளைஞர்கள் மற்றும் பெண்களின் கவனத்தை ஈர்க்க விஜய் திட்டமிட்டுள்ளார். “தவெக-வின் அரசியல் வருகை ஓட்டுகளைப் பிரிக்க அல்ல, ஆட்சி அமைக்கவே” என ஏற்கனவே விஜய் தனது நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையின் மையப்பகுதிகளில் அவர் மேற்கொள்ளும் இந்த முதல் கட்டப் பிரசாரம் தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் பிரசாரப் பயணத்திற்காகச் சென்னைப் பெருநகர காவல்துறையிடம் தவெக நிர்வாகிகள் ஏற்கனவே அனுமதி கோரியுள்ளனர். பிரசாரத்தின் போது விஜய் திறந்த வேனில் சென்றபடி மக்களிடம் உரையாற்ற உள்ளார். விஜய்யின் வருகையை முன்னிட்டு அந்தந்தத் தொகுதிகளில் தவெக கொடிகள் மற்றும் போஸ்டர்கள் மூலம் சென்னை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், பிரசாரப் பாதையில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram