2026 ஐபிஎல் தொடரில் இருந்து தோனி விலகல்?? ரசிகர்கள் அதிர்ச்சி!!

Indian Premier League 2026 சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அணியின் முன்னணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கு காயம் காரணமாக தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சென்னை அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஆனால் இந்த போட்டிக்காக தோனி அணியுடன் பயணம் செய்யவில்லை. அவரது வலது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவர் சென்னையிலேயே தங்கி மருத்துவ கண்காணிப்பில் ஓய்வு எடுத்து வருகிறார்.

முதலில் சில போட்டிகள் மட்டுமே தவறவிடுவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது காயம் எதிர்பார்த்ததை விட தீவிரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏப்ரல் மாத இறுதி வரை அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. குறைந்தது 6 முதல் 8 போட்டிகளில் தோனி இல்லாமல் போகலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அணியின் கேப்டனாக ருத்ராட்ச் கெய்க்வாட் செயல்படுகிறார். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் களமிறங்க உள்ளார். தோனி இல்லாத நிலை, அணியின் மிடில் ஆர்டரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் தோனி விளையாட வாய்ப்பு குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து விளையாடி வந்த தோனி, காயம் காரணமாக நீண்ட காலம் வெளியேறுவது அரிதான ஒன்று. இதனால், இந்த சீசன் முழுவதும் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும், அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் தொடர்கிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram